FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அந்தமான்... நீங்காத நினைவலைகள்...

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் தீவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Updated On : 22 பிப்ரவரி 2026, 4:00 am IST
பகிர்:

ஜே. ரங்கராஜன்

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் தீவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்தம் 836 தீவுகளைக் கொண்டுள்ள அந்தமானில், கடல் அரிப்பைத் தடுக்கும் சதுப்புநிலக் காடுகளை இருபுறமும் கொண்டுள்ள ராஸ் மற்றும் ஸ்மித் தீவு-லாங்க் தீவு-ஹேவ்லாக் தீவு உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கின்றன.

இவை தவிர இணைய சேவை-சூரிய ஒளி மின் சக்தி, போர்ட்பிளேரில் 1,500-க்கும் மேற்பட்ட உயிரின மாதிரி அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய இந்திய உயிரியல் ஆய்வு மையம்.

Advertisement

Advertisement

சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆங்கிலேயரிடம் கொடுமைகளை அனுபவித்த பழைமையான அந்தமான் செல்லுலார் சிறை.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிறை தியாகத்தை கடந்த 53 ஆண்டுகளாக நினைவுகூர்ந்து வரும் அந்தமான் மத்திய செல்லுலார் சிறை-தியாகிகளைப் போற்றும் வகையில் அங்கு நாள்தோறும் திரையிடப்படும் ஒலி-ஒளி காட்சி, போர்ட்பிளேரில் 1943-இல் தேசியக் கொடியை சுபாஷ் சந்திரபோஸ் ஏற்றிய நினைவுத் தூண் பகுதி.

தெற்கு அந்தமானில் தலைநகர் போர்ட் பிளேரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் 300 பேரைக் கொண்ட ஜாரவா பழங்குடியின பகுதி வழியாகச் செல்ல சோதனைச் சாவடி கட்டுப்பாடுகள், வடக்கு அந்தமானில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட 170 படிகளுடன் கூடிய கலங்கரைவிளக்கம் (லைட் ஹவுஸ்) என சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கக் கூடியவை படங்களுடன் கீழே விளக்கப்பட்டுள்ளன.

போர்ட்பிளேரில் அமைந்துள்ள உயிரின மாதிரி அருங்காட்சியகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments