இரண்டே நாள்களில் பான் இந்திய நடிகர்களின் வசூலை முறியடித்த ஸ்பைடர் மேன்!
ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் அதிக திரைகளில் வெளியாகியுள்ளது...
ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியளவில் ஆச்சரியப்படுத்தும் வசூலைச் செய்து வருகிறது.
டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை பிரம்மாண்டமாக வெளியானது. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளதால் இந்த இணைக்கான ரசிகர்களும் பெரிய ஆவலுடன் பார்த்தனர்.
இப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வெளியீட்டைக் கண்டதுடன் இந்திய அளவில் முதல் நாள் வசூலாக ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது, இரண்டாம் நாள் வசூலாக ரூ. 216 கோடி வரை வசூலித்து, பல பான் இந்திய நடிகர்களின் இரண்டு நாள் வசூலைத் தாண்டியுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், உலக அளவில் இப்படம் ரூ. 1700 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். டிசி, மார்வல் திரைப்படங்களுக்கான வணிகங்கள் உலகளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ வே திரைப்படம் செய்திருப்பது சாதனையாகவே கருதப்படுகிறது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கான இந்திய வணிகம் மிகப்பெரியதாக மாறியுள்ளதால், பல திரைப்படங்கள் இந்திய ரசிகர்களையும் கணக்கில் கொண்டு உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
The movie Spider-Man: Brand New Day is achieving surprising box-office collections across India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.