தலையே சுத்துது... ஸ்பைடர் மேன் லாபத்தால் டாம் ஹாலண்ட் பெறப்போகும் சம்பளம்!
டாம் ஹாலண்ட் பெறப்போகும் சம்பளம் குறித்து...
ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்பட லாபத்தால் ஆச்சரியப்படும் சம்பளத்தை டாம் ஹாலண்ட் பெறப்போகிறார்.
ஒருவரின் தலையெழுத்தை மிக விரைவாக மாற்றக் கூடிய தொழில்களில் சினிமாவே முதன்மையானதாக இருக்கிறது. சூதாட்டத்தைப் போல, யாருக்கு எப்போது ஏறுமுகம், இறங்குமுகம் என்பதை ஒருநாளும் கணிக்கவும் முடிவதில்லை. சாதாரண நடிகரை ஒரு திரைப்படம் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் வேகத்திலேயே பாதாளத்தையும் காட்டிவிடும். ஆனால், ஒரு சிலர் மட்டுமே சீறான வேகத்தில் எப்போதும் இருக்கின்றனர்.
அந்தப் பட்டியலில் தற்போது டாம் ஹாலண்ட் பெயரே கவனம் பெற்றுள்ளது. இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய தி ஒடிசி திரைப்படத்தில் நடிகர் மேட் டாமனுக்கு மகனாக டாம் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்தமாகவே இப்படம் நோலனால் மட்டுமே கவனிக்கப்பட்டது. இதில், டாம் ஹாலண்டுக்கு சொல்லிக்கொள்ளும் நடிப்பும் கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
ஆனால், தொடர்ந்து டாம் ஹாலண்ட் நாயகனாக நடித்த ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் வெளியாகி உண்மையாகவே உலகம் முழுவதிலும் உள்ள பட்டிதொட்டிகளில் எல்லாம் ஹிட் அடித்து இதுவரை ரூ. 18 ஆயிரம் கோடி வசூலை அள்ளியிருக்கிறது. அதிலும், இந்தியாவில் மட்டும் ரூ. 560 கோடி!
இப்படத்தைத் தயாரித்த கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் லாப மழையில் குத்தாட்டம் போட்டு வருகின்றன. ஸ்பைடர் மேன் என்றால் இனி மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என்கிற அளவுக்கு ரசிகர்களும் அதனைக் காண ஆர்வம் காட்டி வருவதால் இந்நிறுவனங்கள் அடுத்தடுத்த பாகங்களைத் தயாரிக்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் டாம் ஹாலண்டின் சம்பள விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க இந்திய மதிப்பில் ரூ. 180 கோடியை டாம் ஹாலண்ட் சம்பளமாக பெற்றிருக்கிறார். ஆனால், ஆயிரக்கணக்கான கோடிகளை வசூலித்ததால் லாபத்திலிருந்து போனஸாக மேலும் 80 மில்லியன் டாலர்களை வழங்கத் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாம்.
மொத்தமாக 100 மில்லியன் டாலர்கள்! அதாவது இந்திய மதிப்பில், நடிகர் டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படத்திற்காக மட்டும் வாங்கப்போகிற சம்பளம் ரூ. 950 கோடி. இதன் மூலம் ஒரே ஒரு திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட ஆயிரம் கோடியை சம்பளமாக பெறும் நடிகராகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்!
Tom Holland is set to receive a staggering salary from the profits of the Spider-Man: Brand New Day movie.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.