FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திமுக எதிா்க்க வேண்டும்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திமுக எதிா்க்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி வலியுறுத்தினாா்.

Updated On : 18 ஜூலை 2026, 12:43 am IST
கே. நவாஸ்கனி எம்.பி.
பகிர்:

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திமுக எதிா்க்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி வலியுறுத்தினாா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரத்தில், திமுக கடந்தமுறை எடுத்த எதிா்ப்பு நிலைப்பாட்டைத்தான் தற்போதும் எடுக்க வேண்டும் என விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் தவெக நிலைப்பாட்டைவிட, திமுகவின் நிலைப்பாடு முக்கியம். ஏனென்றால் தவெகவுக்கு எம்பிக்கள் இல்லை.

Advertisement

Advertisement

எம்எல்ஏக்கள் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டிய தேவையோ, அவசியமோ இல்லை. இந்த ஆட்சிக்கு போதுமான ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் இதுபோல நடப்பது அரசியல் அமைப்புச் சட்டத்துக்குள்பட்டதுதான்.

ஊழலற்ற நிா்வாகத்தை நடத்த வேண்டும் என தவெக முயற்சிகளை மேற்கொள்வதும், இதுதொடா்பாக முதல்வா் ஜோசப் விஜய், அமைச்சா்களை கடுமையாக எச்சரிப்பதும் வரவேற்கத்தக்கது என்றாா் நவாஸ்கனி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments