சிவராஜ் பாட்டீல். 
இந்தியா

மும்பை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவியை துறந்தவர்! யார் இந்த சிவராஜ் பாட்டீல்?

மும்பை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று பதவியை துறந்தவர்! யார் இந்த சிவராஜ் பாட்டீல் என்பதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான சிவராஜ் பாட்டீல் இன்று (டிச.12) காலை காலமானார். நீண்ட நெடிய அரசியல் வரலாற்றைக் கொண்டுள்ள அவர் மும்பை குண்டுவெடிப்பின்போது பொறுப்பேற்று தனது பதவியைத் துறந்து மிகவும் புகழ்பெற்றார்.

மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள சக்கூரில் 1935 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பிறந்தவர் சிவராஜ் பாட்டீல்.

1980 ஆம் ஆண்டு லத்தூர் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர், இந்திரா காந்தி அமைச்சரவையில், 1980-1982 வரை பாதுகாப்புத் துறை இணையமைச்சராகப் பணியாற்றினார்.

1980, 1984, 1989, 1991, 1996, 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஏழு முறை மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2004 மக்களவைத் தேர்தலில், மத்திய உள்துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து பாதுகாப்பு குறைபாட்டிற்கு தார்மிகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியை நவம்பர் 30, 2008 அன்று ராஜிநாமா செய்தார்.

உள்துறை அமைச்சராகப் பணியாற்றுவதற்கு முன்பு, சிவராஜ் பாட்டீல் அமைச்சரவையின் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார்.

1982–83 ஆம் ஆண்டு வர்த்தகத்துறை அமைச்சக பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அணுசக்தி, மின்னணுவியல், விண்வெளி மற்றும் கடல் மேம்பாடு (1983–84) ஆகிய துறைகளுக்கு மாற்றப்பட்டார்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில், பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். பின்னர் சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை பொறுப்பையும் வகித்தார்.

கூடுதலாக, அவர் 1991-1996 வரை மக்களவைத் தலைவராகவும் இருந்தார். மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பிறகு, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் ஆளுநராகவும், சண்டீகர் நிர்வாகியாகவும் பாட்டீல் நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில், தில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும், மும்பை குண்டுவெடிப்பின் போது அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் தனது பதவியைத் துறந்தார் என்று அவரை பெயரை பலரும் நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Shivraj Patil, Union Home Minister during the 26/11 Mumbai attack, passes away in Latur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

கரூர் பலி! உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு உள்ளது: உச்ச நீதிமன்றம்

பறை பண்பாட்டு மையத்தை திறந்து வைத்து பறை இசைத்த ஆளுநர் ஆர்.என். ரவி!

யு-19 ஆசிய கோப்பையில் சூர்யவன்ஷி அதிரடி சதம்..! வலுவான நிலையில் இந்தியா!

ஓடிடியில் காந்தா, ஆரோமலே!

SCROLL FOR NEXT