கும்பமேளாவைப் போன்ற ஆந்திர மாநிலத்தில் கோதாவரி நதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோதாவரி மகா புஷ்கரம் நடைபெறுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோதாரி புஷ்கர புனித யாத்திரை ஆந்திர மாநிலத்தில் ஜூன் 26, 2027 முதல் ஜூலை 7 வரை 12 நாள்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வருவாய்த் துறையின் முன்னாள் சிறப்புச் செயலாளர் எம். ஹரி ஜவஹர்லால் கூறுகையில்,
கும்பமேளாவை போன்று சிறப்பு வாய்ந்தது கோதாவரி மகா புஷ்கர விழா. இந்த விழா 12 நாள்கள் நடைபெறும்.
அந்தவகையில், வரவிருக்கும் கோதாவரி புஷ்கரங்களின் காலத்தைத் தீர்மானிப்பதற்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் ஆஸ்தான ஜோதிடர் டி.வெங்கட கிருஷ்ண பூர்ண பிரசாத்தின் கருத்தை மாநில அரசு பெற்றதாக அவர் கூறினார்.
கோதாவரி புஷ்கரத்தை அரசு கவனமாகப் பரிசீலித்து 2027 ஜூலையில் நடைபெறும் என்று அறிவித்துள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த மாபெரும் புனித யாத்திரையின் தேதிகளை நிர்ணயிப்பதற்காக அறநிலையத்துறை ஆணையர் டிடிடி அர்ச்சகரின் நிபுணத்துவத்தைக் கோரினார், அதே நேரத்தில் மாநில அரசும் இந்த மத நிகழ்வு குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சால்ட் லேக் திடலில் மெஸ்ஸி..! ரசிகர்கள் ஆரவாரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.