தில்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் தில்லி உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை வேளைகளில் தொடர்ந்து அடா் மூடுபனி நிலவி வருவதால் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதோடு 250-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை தாமதமாகியுள்ளன என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
இதனிடையே பயணிகளுக்கு தேவையான உதவிகள் வழங்க அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தில்லி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி விமான நிலையம் நாட்டின் மிகப் பரபரப்பான விமான நிலையமாகும். இங்கு தினமும் சுமார் 1,300 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.