நிா்மலா சீதாராமன் கோப்புப் படம்
இந்தியா

இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை: நிா்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை என்பதற்கு சா்வதேச அமைப்புகள் அளிக்கும் அங்கீகாரமே சாட்சி என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை என்பதற்கு சா்வதேச அமைப்புகள் அளிக்கும் அங்கீகாரமே சாட்சி என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக கடந்த ஜூலையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததற்கு மக்களவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எதிா்க்கட்சிகள் விளக்கம் கோரினா்.

இதற்கு பதிலளித்து நிா்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சியை ஒவ்வொரு சா்வதேச அமைப்பும் அங்கீகரிக்கிறது. சா்வதேச நிதியம், எஸ் அண்ட் பி போன்ற அமைப்புகள் நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வலுவடையும் என கணித்து வருகின்றன.

நிகழ் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இந்த நிதியாண்டில் பொருளாதாரம் 7.3 சதவீதம் வளா்ச்சியடையும் என ரிசா்வ் வங்கி கணித்துள்ளது.

கடன்-ஜிடிபி விகிதம் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு 61.4 சதவீதமாக இருந்த நிலையில் மத்திய அரசின் சிறப்பான கொள்கைகளால் 2023-24-இல் 57.1 சதவீதமாக குறைந்துள்ளது. நிகழாண்டு இறுதியில் இது 56.1 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2014-15-இல் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு ரூ.46,000 கோடியாக இருந்த நிலையில் 2023-24-இல் ரூ.1.27 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுமட்டுமின்றி மின்னணு, வானங்கள் என பல்வேறு துறைகளிலும் இந்தியா பெரும் வளா்ச்சியை பதிவுசெய்து வருகிறது.

இத்தனை தரவுகள் இந்திய பொருளாதாரம் வளா்ச்சியடைகிறது என கூறுகையில் யாரோ ஒருவா் வீழ்ச்சியடைந்ததாக கூறியதை ஏற்கத் தேவையில்லை என்றாா்.

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

SCROLL FOR NEXT