எஸ்ஐஆர் நடவடிக்கை எதிரொலி :
ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை(டிச. 16) வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 42 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணிகளின் ஒரு பகுதியாக ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுவதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில், ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை(டிச. 16) வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 42 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவீன் மஹாஜன் தெரிவித்திருப்பதாவது: “5.46 கோடி வாக்காளர்களில் 41.79 லட்சம் வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்படவில்லை.
இதனையடுத்து, அந்தப் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன. அவர்களில், 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்றும், 29.6 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள் என்றும், 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களைப் பதிவு செய்தவர்கள்” என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.