அடர்ந்த பனிமூட்டத்தால் ஏற்பட்ட குறைந்த பார்வைத் திறன் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 66 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தலைநகர் தில்லி உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை வேளைகளில் தொடர்ந்து அடா் மூடுபனி நிலவி வருவதால் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, தில்லி விமான நிலையம் பயணிகளுக்கு அறிவுறுத்தலை ஒன்றை வெளியிட்டது. அதில் குறைந்த பார்வைத் திறன் காரணமாகப் பின்பற்றப்படும் நடைமுறைகள் அமலில் உள்ளதாகத் தெரிவித்தது. மேலும் நகரில் அனைத்து விமானச் செயல்பாடுகளும் சாதாரணமாக இயங்கி வருவதாகவும் தில்லி விமான நிலையம் குறிப்பிட்டது.
இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், சமீபத்திய விமான நிலவரங்களைத் தெரிந்துகொள்ள பயணிகள் தமது விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியது.
இதற்கிடையில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில், அமிர்தசரஸ், தில்லிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் மூன்று விமானங்கள், அந்த நகரங்களில் நிலவிய மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டன.
முன்னதாக, இந்தியாவின் உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ, அடர்ந்த பனிமூட்டத்தால் ஏற்படும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக ராஞ்சி, ஜம்மு, ஹிண்டன் விமான நிலையங்களில் விமானச் சேவைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரித்து பயண ஆலோசனையை வெளியிட்டது.
இண்டிகோ நிறுவனம் வானிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சமீபத்திய விமானத் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறியது.
இதையும் படிக்க: இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.