குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி
குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தனது தாயின் பின்னால் நடந்துச் சென்ற சிறுவனை பண்ணையில் மறைந்திருந்த சிறுத்தை இழுத்துச் சென்றதாக பொறுப்பு வனத்துறை உதவி பாதுகாவலர் பிரதாப் சந்து தெரிவித்தார்.
இதில் பலத்த காயமடைந்த சிறுவன் சாஹில் கடாரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அங்கு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனிடையே சிறுவனைத் தாக்கிய சிறுத்தையைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
Advertisement
Advertisement
மூன்று கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வன அதிகாரிகள் குழு அந்த இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 28ஆம் தேதி தல்கானியா வனப்பகுதியில் சிறுத்தை தாக்கியதில் ஒரு வயது பெண் குழந்தை பலியானது குறிப்பிடத்தக்கது.
A five-year-old son of a farm labourer was mauled to death by a leopard in Gujarat's Amreli district on Sunday morning, an official from the forest department said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.