நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் டிசம்பர் 26 முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, 215 கி.மீ. தொலைவுக்கும் குறைவாக சாதாரண வகுப்பில் பயணிப்பதற்கான கட்டணத்தில் எவ்வித உயர்வும் இல்லை.
215 கி.மீ. தொலைவுக்குமேல் என்றால் - சாதாரண வகுப்புக்கு ஒரு கி.மீ.-க்கு ஒரு பைசா வீதம் உயர்த்தப்படும். ஏசி அல்லாத விரைவு மற்றும் ஏசி வகுப்பில் ஒரு கி.மீ.-க்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது.
500 கி.மீ. தொலைவு என்றால் - ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிகள் ரூ. 10 மட்டுமே கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தச் சீரமைப்பின் மூலம், ரயில்வே சுமார் ரூ. 600 கோடி ஈட்டும்.
ரயில்வே ஊழியர்கள், ஓய்வூதியம், செயல்பாட்டுச் செலவு ஆகியவை உயர்ந்ததால், செலவைச் சமாளிக்க கட்டணத்தைச் சீரமைத்தலில் ரயில்வே கவனம் கொள்கிறது.
இருப்பினும், புறநகர் மற்றும் மாதாந்திர பயணச் சீட்டுக்கான கட்டணங்களில் எவ்வித உயர்வும் இல்லை.
என்னதான் டிக்கெட் விலையை உயர்த்தினாலும், டிக்கெட் எடுக்காமலேயே, வட மாநிலத்தவர்கள் ரயில்களில் பயணிப்பர் என்று சமூக ஊடகங்களில் இணையவாசிகள் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், முன்பதிவு செய்தவர்களுக்கான இருக்கையையும் அவர்கள் பறிப்பதையும் ரயில்வே நிர்வாகத்தால் தடுக்க முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.