தனியார் பல்கலைக்கழக ஊழியர் மரணத்தில் திடீர் திருப்பமாக, அவரது மனைவி மற்றும் ஆண் நண்பர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மரணம் தொடர்பான விசாரணையில் மர்ம முடிச்சிகள் அவிழ்க்கப்பட்டது எப்படி என்பதை காவல்துறை விளக்கியிருக்கிறது.
45 வயது நபரை அவரது மனைவி, 22 வயதான ஆண் நண்பருடன் சேர்ந்து கழுத்தை நெறித்துக் கொலை செய்திருக்கிறார்.
பிறகு, உறவினர்களிடம், கணவர் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். தொடர்ந்து காவல்நிலையத்தில், தனது கணவர் கழிப்பறையில் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகப் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, இறந்தவரின் உடலில் சில காயங்கள் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் சந்தேகம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மனைவிக்கும், அவரது ஆண் நண்பருக்கும் இருக்கும் உறவு பற்றி கணவருக்கு சந்தேகம் வந்து கேள்வி எழுப்பத் தொடங்கியதால், அவரை கொலை செய்ய முடிவு செய்ததாகக் கூறியுள்ளனர்.
டிச. 11ஆம் தேதி, கணவர் வீட்டுக்கு வந்ததும், மனைவி தன்னுடைய ஆண் நண்பரை அழைத்துள்ளார். ஆண் நண்பர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் வீட்டுக்கு வந்து, மூன்று பேரும் சேர்ந்து அவரை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளனர். பிறகு மூன்று பேரும் சேர்ந்து ஆதாரங்களை மறைத்துவிட்டு, இயற்கையாக மரணம் அடைந்தது போல நாடகமாடி மாட்டிக் கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.