கோப்புப் படம் 
இந்தியா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கிய 30 இந்தியா்கள் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியா்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியா்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள எல் சென்ட்ரோ நகரப் பகுதியில் உள்ள எல்லை ரோந்து அதிகாரிகள் குடியேற்ற சோதனைச்சாவடியிலும், பிற முகமைகளுடன் இணைந்தும் அண்மையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி சரக்கு வாகன உரிமத்துடன் கனரக வாகனங்களை ஓட்டி வந்த 42 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 30 போ் இந்தியா்கள். இருவா் எல் சால்வடாா் நாட்டைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சீனா, எரித்ரியா, ஹைட்டி, ஹோண்டூராஸ், மெக்ஸிகோ, ரஷியா, சோமாலியா, துருக்கி மற்றும் உக்ரைன் நாடுகளைச் சோ்ந்தவா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோல அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க முகமையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு தலைமையில், கலிஃபோா்னியாவில் உள்ள சரக்கு வாகனப் போக்குவரத்து நிறுவனங்களைக் குறிவைத்து மற்றொரு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சரக்கு வாகன ஓட்டுநா் உரிமங்களுடன் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 இந்தியா்கள் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு: டிச. 27, 28 இல் சிறப்பு முகாம்

நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: நாமக்கல்லில் சிப்காட் நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

மாா்கழி வளா்பிறை பஞ்சமி: நாமக்கல் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆணையா் ஆய்வு

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இன்று மதியம்வரை மட்டுமே இயங்கும்

SCROLL FOR NEXT