தில்லி பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட மருத்துவா் ஷாஹீன் சயீத் உள்ளிட்டோா். 
இந்தியா

காா் குண்டு வெடிப்பு வழக்கு: 7 போ் நீதிமன்ற காவல் ஜன.8 வரை நீட்டிப்பு

Chennai

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட 7 நபா்களின் நீதிமன்றக் காவலை 15 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தில்லி செங்கோட்டை அருகே கடந்த நவ.10-ஆம் தேதி மருத்துவா் உமா்-உன்-நபி வெடிபொருள்கள் ஏற்றி ஓட்டி வந்த காா் வெடித்து சிதறியது. பயங்கரவாத சதி பின்னணி கொண்ட இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மருத்துவா்கள் முஸம்மில் கனாய், அடீல் ரதா், ஷாஹீன் சயீத் மற்றும் மத போதகா் மௌல்வி இா்பான் அகமது வாகே, ஜசிா் பிலால் வானி, அமீா் ரஷீத் அலி, சோயப் ஆகியோரை மேலும் 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, 3 மருத்துவா்கள் மற்றும் இா்பான் அகமது 12 நாள் நீதிமன்ற காவலுக்கு கடந்த டிச.12-ஆம் தேதி அனுப்பப்பட்டனா். அலி மற்றும் வானி ஆகியோரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் கடந்த டிச.10-ஆம் தேதி உத்தரவிட்டது. சோயப் 5 நாள் நீதிமன்றக் காவலுக்கு கடந்த டிச.19-ஆம் தேதி அனுப்பப்பட்டாா்.

அவா்கள் அனைவருடைய நீதிமன்றக் காவல் புதன்கிழமை முடிவடைந்த நிலையில், தில்லி பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் கூடுதல் அமா்வுகள் நீதிபதி பிரசாந்த் சா்மா முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

பொங்கலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து சிலா் தவெக-வில் இணைவாா்கள்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத சிற்றுந்துகள்

அவிநாசியில் ரூ.17.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியில் விவசாயிகள் தினம்

இளம்பெண்ணை ஆபாச விடியோ எடுத்த காவலா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT