வடகிழக்கு மாநிலமான மிசோரமில், பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரது வீட்டில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அய்ஸால் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் எஸ்ரெலா டலிடியா ஃபனாய் (வயது 41). இவர், நாட்டின் சில முன்னணி செய்தி நிறுவனங்களில் பத்திரிகையாளராகப் பணிப்புரிந்து வந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் எஸ்ரெலாவின் தாயார் உடல் நலக் குறைவால் காலமான பின்பு, அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இறுதியாக, புதன்கிழமை (டிச. 24) காலை எஸ்ரெலாவின் உறவினர்கள் அவரை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
ஆனால், கிறிஸ்துமஸ் திருநாளின் கொண்டாட்டங்களை முன்னிட்டு நேற்று இரவு அவரது வீட்டுக்கு வந்த தேவாலயக் குழுவினர் எஸ்ரெலாவை தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எஸ்ரெலாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இன்று காலை அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, இறந்த நிலையில் எஸ்ரெலாவின் சடலத்தை அவர்கள் மீட்டுள்ளனர்.
ஏற்கெனவே, அவரது தாயாரின் மறைவுக்குப் பின்பு எஸ்ரெலா மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, எஸ்ரெலாவின் மறைவுக்கு பல்வேறு முன்னணி பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: அழியும் நிலையில் இந்திய கால்பந்து..! எஃப்சி கோவா வீரர்களின் நூதன போராட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.