கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விடியோ ஒன்றை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விடியோ ஒன்றை வெளியிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தனது பதிவில், "அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
இந்தத் பண்டிகை காலம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். உங்கள் வாழ்க்கையை அன்பாலும் கருணையாலும் நிரப்பட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.