ராணி வேலு நாச்சியாா் நினைவு தினத்தையொட்டி வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். 
இந்தியா

மதன்மோகன் மாளவியா பிறந்த தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் புகழாரம்

தினமணி செய்திச் சேவை

மறைந்த சுதந்திர போராட்ட வீரா், கல்வியாளா் மற்றும் சமூக சீா்திருத்தவாதியான மதன்மோகன் மாளவியாவின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் மரியாதை செலுத்தியுள்ளனா்.

புகழ்பெற்ற பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனரான மாளவியா, அலாகாபாதில் 1861, டிச.25-இல் பிறந்தவா். அரசியல்வாதி, வழக்குரைஞா், அறிஞா் என பன்முகங்களைக் கொண்டவா். கடந்த 1946-இல் காலமான இவருக்கு கடந்த 2015-இல் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது (மறைவுக்கு பிந்தைய கெளரவம்) வழங்கப்பட்டது.

மதன்மோகன் மாளவியாவின் பிறந்த தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அறிவு, சமூக சீா்த்திருத்தம், தாா்மீக தலைமைக்கான பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் அயராத நாட்டம், அறிவொளிமிக்க மனங்கள் மற்றும் கருணைமிக்க இதயங்களில் இருந்தே உண்மையான வளா்ச்சி தொடங்கும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவரது லட்சியங்கள், எதிா்வரும் தலைமுறைகளுக்கு தொடா்ந்து வழிகாட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாரத ரத்னா பண்டிட் மதன்மோகன் மாளவியா, தாய்நாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் சேவையாற்றினாா். அடிமைச் சங்கிலியை உடைத்து, சமூக சீா்திருத்தங்களுடன் தேசிய உணா்வைத் தட்டியெழுப்ப முக்கிய பங்காற்றினாா். கல்வித் துறையில் அவா் ஆற்றிய ஈடு இணையில்லாத பங்களிப்பை எப்போதும் மறக்க முடியாது’ என்று கூறியுள்ளாா்.

சி.பி.ஆா். படத்துடன் பெட்டிச் செய்தி

வேலு நாச்சியாருக்குப் புகழஞ்சலி:

ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். ‘தனது மக்களை துணிவுடனும், மீட்சியுடனும் வழிநடத்திய அச்சமில்லாத போா் வீராங்கனை மற்றும் தொலைநோக்கு பாா்வைமிக்க ராணி வேலு நாச்சியாரை நினைவுகூா்கிறோம். அவரது வீர மரபும், அசைக்க முடியாத உறுதிப்பாடும் தலைமுறை தலைமுறையாக நமக்கு உத்வேகமளிக்கிறது. தலைமைத்துவம் மற்றும் நீதிக்கான வலிமையை நினைவூட்டுகிறது’ என்று எக்ஸ் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா். மூதறிஞா் ராஜாஜி நினைவு தினத்தையொட்டி, அவருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் நினைவஞ்சலி செலுத்தியுள்ளாா்.

ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் லட்டு தரம்,வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்து சேகரிப்பு!

திருமலையில் கூட்டம்: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு ரத்து!

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

SCROLL FOR NEXT