மாற்றி யோசிக்கத் தொடங்கிய ஜென் ஸீ தலைமுறை :
2025 இல், ஜென் ஸீ தலைமுறையினர் வழக்கமான வேலை தேடும் நடைமுறையிலிருந்து மாறுபட்டு நிற்பதாக கள நிலவரங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சியால், எண்ட்ரி லெவல் பணியிடங்கள் என்றழைக்கப்படும் விளிம்புநிலை தொழில்நுட்ப பணியிடங்களுக்கான தேவை கணிசமாகக் குறைந்துவிட்டதாம். கடந்த 2024முதல், இளநிலை பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு கணிசமாகக் குறைக்கப்பட்டிருப்பதை உலகளாவிய தரவுகள் வெளிக்காட்டுகின்றன.
நிறுவனங்கள் பலவும் சீனியர் பணியிடங்களில் பணியாற்றும் பணியாட்களை வைத்துக்கொண்டு ஜூனியர் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பதை நிறுத்திக் கொண்டுள்ளதாம். மேற்கண்ட ஜூனியர்நிலை பணிகள் ஏஐ தொழில்நுட்ப உதவியால் கையாளப்படுவதால் அவற்றுக்கான தேவை குறைந்துவிட்டது இதற்கு முக்கிய காரணமாம்.
இதன் காரணமாக, வேலை சந்தையில் பட்டதாரிகள் முற்றுச்சந்தையில் நிற்பதை உணருகிறார்களாம்.
இந்த மாற்றத்தை உற்று கவனிக்கும் இளம் தலைமுறையைச் சார்ந்த ஜென் ஸீ இளையோர், வழக்கமான வேலை தேடும் பாணியை விட்டு விலகி, மாற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டனராம். இளநிலை தொழில்நுட்ப பணிகள், நிதி, நிர்வாகம் மற்றும் அவற்றைச் சார்ந்த வாடிக்கையாளர் சேவை உள்பட துணைப் பணியிடங்கள் ஆகியவற்றிலிருந்து ஜென் ஸீ இளையோர் விலகுவதாக தெரியவந்துள்ளது.
முதலில், படித்துப் பட்டம் பெற்று பின் வேலையில் சேருவதை விடுத்து, பணியிடங்களுக்கு ஏற்ற திறனை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனராம்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.