இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் 
இந்தியா

பொங்கல் திருநாள்: பட்டயக் கணக்காளர் தேர்வுத் தேதி ஜன. 19-க்கு மாற்றம்!

பொங்கல் திருநாளில் நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் தேர்வின் தேதியை மாற்றி அறிவிப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

பட்டயக் கணக்காளர் தேர்வுத் தேதியை ஜன. 19 ஆம் தேதிக்கு மாற்றி பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவித்துள்ளது.

பட்டயக் கணக்காளர்கள் இடைநிலைத் தேர்வின் குரூப் 2, ஐந்தாம் தாள் பொங்கல் திருநாளில் நடைபெறுவதாய் இருந்தது. ஆனால், பொங்கல் திருநாளில் தேர்வு நடத்தப்படுவதற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில், ஜன. 15-ல் நடைபெறவிருந்த தேர்வை, ஜன. 19-க்கு மாற்றி இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவித்துள்ளது. இருப்பினும், மற்றைய தேர்வுகளின் தேதிகளில் மாற்றமில்லை.

மேலும், ஏற்கெனவே நுழைவுச் சீட்டுகளே செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் ஜன. 15-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதால், தேர்வுத் தேதியை மாற்றியிருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.

Pongal Celebration: ICAI reschedules CA Intermediate exam Paper 5 for 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமுதாய நோக்கில் பாவைப் பாசுரங்கள்

குமர குருபர அடிகளார் 400

தில்லையில் ஆடு புலி ஆட்டம்!

நெஞ்சொடு கிளத்தல்

நாலடியார்: நாள்தோறும் கழியும் ஆயுள்!

SCROLL FOR NEXT