ராஜஸ்தான் மாநிலத்தில் 150 கிலோ வெடிபொருள்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் 2 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டோங்க் மாவட்டத்தில், சிராவூஜ் கிராமத்தில் அருகில் உள்ள 52 ஆவது தேசிய நெடுஞ்சாலையில் பரோனி காவல் துறையினர் இன்று (டிச. 31) காலை 9 மணியளவில் உரங்களை ஏற்றிச் சென்ற காரை நிறுத்தி சோதனைச் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது காரில் இருந்த சுரேந்திரா (வயது 48) மற்றும் சுரேந்திரா மோச்சி (33) ஆகிய இருவரும் முரணாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் கொண்டு வந்த மூட்டைகளைச் சோதனைச் செய்துள்ளனர்.
அப்போது, அந்த 4 மூட்டைகளில் சுமார் 150 கிலோ எடையுள்ள அமோனியம் நைட்ரேட் எனும் வெடிபொருள்கள், 200-க்கும் அதிகமான கார்டிரேஜ்கள், 1,100 மீட்டர் நீளமுடைய வயர் ஆகியவற்றை பதுக்கி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், வெடி பொருள்கள் கொண்டு வந்த இருவரிடமும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருள்களின் மூலம் மிகப் பெரியளவிலான வெடிகுண்டு தாக்குதலை ஏற்படுத்த முடியும் என காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையிலான எல்லை அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 150 கிலோ அளவிலான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.