பாலியல் வன்கொடுமை: உத்தரப் பிரதேசத்தில் 13 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமேதி மாவட்டம், ஃபர்சத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி வயலுக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், அந்த சிறுமியை வயலுக்கு அருகே இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டயதாக கூறப்படுகிறது.
பின்னர், வீடு திரும்பிய சிறுமி நடந்ததை தனது தாயிடம் தெரிவித்த நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஃபர்சத்கஞ்ச் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இளைஞரைத் தேடுவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.