2026 புத்தாண்டை வரவேற்கும் வகையில், கூகுள் நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான கவன ஈர்ப்புச் சித்திரத்தை(டூடுல்) வெளியிட்டுள்ளது.
உலகின் பிரபல தேடுபொறி தளமான கூகுள் நிறுவனம் முக்கியஸ்தர்களின் பிறந்தநாள், விடுமுறை நாள்கள், முக்கிய தேதிகள் உள்பட சிறப்பு நாள்களில் அனிமேஷன்கள், ஸ்லைடுஷோக்கள், விடியோக்கள் மற்றும் கேம்கள் உள்பட பல்வேறு வடிவங்களில் வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த வகையில் இன்று(டிச. 31) புத்தாண்டை வரவேற்கும் வகையில், கூகுள் நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
இந்த டூடுலானது, 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து, 2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளதைக் குறிப்பிடுவதாக இருக்கிறது.
மேலும், உலகம் முழவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளை கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.