மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்சம் மேகசந்திரா  படம் - ANI
இந்தியா

சட்டப்பேரவை கலைக்கப்பட்டால் மட்டுமே மணிப்பூரில் மீண்டும் அமைதி நிலவும்: காங்கிரஸ்!

மணிப்பூரில் சட்டப்பேரவையைக் கலைத்து புதியதாகத் தேர்தல் நடத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்...

இணையதளச் செய்திப் பிரிவு

மணிப்பூரில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு புதியதாகத் தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே மீண்டும் அமைதியும் இயல்புநிலையும் திரும்பும் என மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்சம் மேகசந்திரா கூறியுள்ளார்.

மணிப்பூரில் செய்தியாளர்களுடன் இன்று (டிச. 31) பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கெய்சம் மேகசந்திரா கூறியதாவது:

“அனைவரும் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். ஆனால், மணிப்பூரில் அதுபோன்ற கொண்டாட்டங்கள் இல்லை. மாநில மக்களின் நல்வாழ்விற்கான ஒரே தீர்வு சட்டப்பேரவை கலைக்கப்பட்டு புதியதாகத் தேர்தல் நடைபெற வேண்டும். அப்படி நடைபெற்றால் மட்டுமே மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்பும்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், மணிப்பூரில் நிலவும் நெருக்கடி மக்களின் கனவுகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதில் அரசின் தோல்வியை அம்பலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தது முதல் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

இதனால், 2027 ஆம் ஆண்டு வரை பதவிக் காலம் பெற்றுள்ள 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூரின் சட்டப்பேரவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோகி பாபுவின் 300 ஆவது படம்! விஜய் சேதுபதி வெளியிடும் முதல் பார்வை போஸ்டர்!

விடைபெற்றது 2025... பிறந்தது புத்தாண்டு 2026!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தீப்தி சர்மா சாதனை!

ராஜஸ்தானில் 150 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்! இருவர் கைது! பயங்கரவாதிகள் சதி?

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவலைக்கிடம்!

SCROLL FOR NEXT