பட்ஜெட்: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
குடியரசுத் தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு...
இந்தியாபட்ஜெட்: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
குடியரசுத் தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு...
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.
அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு செல்லும் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறவுள்ளார்.
இதையும் படிக்க : பட்ஜெட்: 3-வது முறையாக சனிக்கிழமை செயல்படும் பங்குச் சந்தை!
மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தொடர்ந்து 8ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8-ஆவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.