மத்திய பட்ஜெட்: குடியரசுத் தலைவரை சந்தித்த நிர்மலா சீதாராமன்!
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, குடியரசுத் தலைவரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தது குறித்து...
2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், நிதியமைச்சக அதிகார்கள் உடன் இருந்தனர்.
நிர்மலா சீதாராமனுக்கு தயிரில் சர்க்கரை கலந்த இனிப்பை ஊட்டி, முர்மு வாழ்த்து தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டு நிர்மலா சீதாராமன் உரையாற்ற உள்ளார்.
இதில், தொழில் துறையினருக்கான சலுகைகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கான புதிய திட்ட அறிவிப்புகளும் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்திய இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரை வரி விதித்துள்ள நிலையில், தொழில் துறையினருக்கான புதிய சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தொடா்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளாா். சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
Union Budget 2026 Nirmala Sitharaman meets President Murmu at Rashtrapati Bhavan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.