ENS
இந்தியா

விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? - ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

DIN

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றினார். பல்வேறு துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பிகார் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அந்த மாநிலத்திற்கு அதிக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களின் பெயர்கள் மட்டும் பட்ஜெட்டில் உள்ளன. குறிப்பாக பட்ஜெட்டில் இருந்தது பிகார், பிகார், பிகார்... மட்டுமே.

பஞ்சாப் பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்காக விவசாயிகள் கடந்த 4 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக அவர்கள் என்ன அறிவித்தார்கள்? இது விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளின் குரல் கேட்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT