மத்திய பட்ஜெட் ANI
இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்!

மத்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவில் வாழும் சாதாரண மனிதர்களைவிடவும், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாட்டு வாழ்பவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சில முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா திட்ட தொகுப்புக்கான டிசிஎஸ் வரி விகிதத்தை 5 சதவீதம் மற்றும் 20 சதவீதத்திலிருந்து தற்போது 2 சதவீதமாகக் குறைக்கப்படும். இந்த தொகைக்கு அதிகபட்ச தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்தியாவில் வசிக்காத வெளிநாட்டவரால் விற்பனை செய்யப்படும் அசையாச் சொத்துகளுக்கு, இந்தியாவில் குடியிருக்கும் சொத்து வாங்குபவரின் பான் எண் அடிப்படையிலான செலான் மூலம் டீடிஎஸ் கழிக்கப்பட்டு டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இடம்பெயர்ந்த இந்தியர்கள் உள்பட, சிறு தொகை வரி செலுத்துவோர் ஆகியோர், தங்களது வருவாயை அல்லது வெளிநாட்டில் இருக்கும் சொத்துகள் குறித்து தெரிவிக்க ஆறு மாதங்களுக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்படும்.

வெளிநாடுகளில், ரூ.20 லட்சத்திற்கும் குறைவான மொத்த மதிப்புள்ள அசையா சொத்துகளை வெளியிடாமல் இருப்பதால் ஏற்படும் எதிர்விளைவுகளிலிருந்து இந்த வாய்ப்பு காப்பாற்றும்.

அனுமானத்தின் அடிப்படையில் வரி செலுத்தும் அனைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் குறைந்தபட்ச மாற்று வரி (MAT) விலக்கு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மை லார்ட் வெளியீட்டுத் தேதி!

இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்: இபிஎஸ் பாராட்டு

ஆஸி.க்கு எதிரான கடைசி டி20யில் பாகிஸ்தான் பேட்டிங்!

மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் ஒரே துறை?

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: மக்கள் விரோதமானது! - மமதா

SCROLL FOR NEXT