திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் PTI
இந்தியா

மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புதித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தி நிகழ்வுக்கு உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது இதுவே முதல்முறை என்ற சாதனையையும் மகா கும்பமேளா படைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

இதுவரை நேற்று வரையிலான தரவுகளின்படி, இதுவரை 33 கோடி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

ஜனவரி மாதம் வரையில் 29.6 கோடி பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகைபுரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பிப்ரவரி முதல் நாளில் சுமார் 3 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

வார இறுதி நாள்கள் என்பதால் கடந்த இரு நாள்களாக பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

SCROLL FOR NEXT