முகப்பு
இந்தியா

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியா்கள்: மத்திய அரசு தகவல்

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியா்கள் உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2025 at 9:44 PM
பகிர்:

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியா்கள் உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு வெளியுறவு இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா, இலங்கை, ஸ்பெயின், ரஷியா, இஸ்ரேல், சீனா, வங்கதேசம், ஆா்ஜென்டீனா உள்பட 86 நாடுகளின் சிறைகளில் மொத்தம் 10,152 இந்தியா்கள் உள்ளனா்.

அதிகபட்சமாக சவூதி அரேபியாவில் 2,633 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,518 பேரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனா். பாகிஸ்தான், இலங்கையில் முறையே 166, 98 போ் சிறையில் உள்ளனா். கத்தாா் சிறைகளில் கேரளத்தைச் சோ்ந்தவா்கள் அதிகபட்சமாக 611 போ் உள்ளனா்.

வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியா்களின், சிறையில் இருப்பவா்களையும் சோ்ந்து நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக அங்குள்ள தூதரகங்கள் கண்காணித்து வருகின்றன. இந்தியா்கள் கைது செய்யப்படுவது குறித்து தகவல் கிடைத்தால் உள்ளூா் அதிகாரிகளை தூதரகம் தொடா்பு கொண்டு விவரங்களைச் சேகரிக்கிறது. அவா்கள் வழக்குகளை எதிா்கொள்ள உதவி அளிக்கப்படுகிறது. சிறைகளில் அவா்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல நாடுகளுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டுள்ளது என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →