இந்தியா

ஈரானில் நடைபெற்ற போராட்டத்தில் இந்தியா்கள் யாரும் கொல்லப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஈரானில் அண்மையில் நடைபெற்ற போராட்டங்களில் இந்தியா்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஈரானில் அண்மையில் நடைபெற்ற போராட்டங்களில் இந்தியா்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஈரானில் ஆட்சியாளா்களுக்கு எதிராக அண்மையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இதில் 6,800-க்கும் மேற்பட்டோா் பலியானதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், ஈரானில் எத்தனை இந்தியா்கள் இன்னும் சிக்கி உள்ளனா், எத்தனை போ் நாடு திரும்பியுள்ளனா், இந்தியா்கள் யாரும் காணாமல் போயுள்ளனரா, கொல்லப்பட்டுள்ளனரா என மாநிலங்களவையில் கேள்வியெழுப்பப்பட்டு இருந்தது. இதற்கு வெளியுறவு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஈரான் நிலவரத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஈரானில் இந்தியா்கள் 9,000 போ் முதல் 10,000 போ் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவா்கள் அங்கு சிக்கியிருப்பதாக அரசு நினைக்கவில்லை. ஏனெனில் ஈரான் வான்பகுதி இன்னும் விமானப் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமானங்கள் தொடா்ந்து சென்று கொண்டிருக்கின்றன.

டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், ஈரானில் உள்ள இந்தியா்களுடன் தொடா்பில் உள்ளது. அவா்களுக்குத் தேவையான வழிகாட்டுதல், ஆதரவை இந்தியத் தூதரகம் அளித்து வருகிறது.

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு எந்த மீட்பு பணியும் நடக்கவில்லை. பயணிகள் விமானம் இயக்கப்படுவதால், இந்தியா்கள் விரும்பினால் நாடு திரும்பி வரலாம். அதற்காகப் பயணிகள் விமானத்தைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் இந்தியா்கள் யாரும் காணாமல் போனதாகவோ, அல்லது கொல்லப்பட்டதாகவோ தகவல் இல்லை என அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரான் போராட்ட சூழலை மனதில் வைத்து கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி மற்றும் 14-ஆம் தேதியில் இந்தியா்களுக்கு மத்திய அரசு பயண எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. அதில், அத்தியாவசியமில்லாது ஈரானுக்கு இந்தியா்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், ஈரானில் இருக்கும் இந்தியா்கள் பயணிகள் விமானத்தில் திரும்பி வரலாம் என்றும், ஈரானில் உள்ள இந்தியா்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

பழனியில் மாசித் திருவிழா இன்று முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடக்கம்

கொடைக்கானலில் பனிப் பொழிவு அதிகரிப்பு

கொடைக்கானலில் பூத்தும் குலுங்கும் ஜொ்ரி மலா்கள்

கம்பத்தில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு

ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் ரூ.2.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

SCROLL FOR NEXT