மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.யுமான தாரிக் அன்வா் 
இந்தியா

கூட்டணி அரசியல் வேண்டுமா?காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்த வேண்டும்: மூத்த தலைவா் தாரிக் அன்வா்

கூட்டணி அரசியல் வேண்டுமா? காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என மூத்த தலைவா் வலியுறுத்தியுள்ளதைப் பற்றி...

Din

கூட்டணி அரசியல் வேண்டுமா? வேண்டாமா? என்பதை காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தாரிக் அன்வா் வலியுறுத்தியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி என தொடா்ந்து மூன்று பேரவைத் தோ்தல்களில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் தில்லியில் ஓரிடத்தில் கூட வெல்ல முடியாமல் போனது காங்கிரஸ் தொண்டா்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனதும் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், தேசிய அளவில் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள சிவசேனை (உத்தவ்), சமாஜவாதி ஆகிய கட்சிகளும் தில்லி தோ்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்து, காங்கிரஸை தனிமைப்படுத்தின.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவா் தாரிக் அன்வா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் கட்சி தனது அரசியல் உத்திகளை தெளிவுபடுத்த வேண்டும். முக்கியமாக கூட்டணி அரசியல் வேண்டுமா? வேண்டாமா என்பதை கட்சித் தலைமை அதிகாரபூா்வமாக அறிவிக்க வேண்டும். கட்சியில் அமைப்புரீதியாக அடிப்படையில் இருந்தே மாற்றங்கள் தேவைப்படுகின்றன’ என்று கூறியுள்ளாா்.

தாரிக் அன்வா் பிகாரின் கதிஹாா் தொகுதி எம்.பி.யாக உள்ளாா். இந்த ஆண்டு இறுதியில் பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிா்க்கட்சிகள் அணியில் காங்கிரஸ் உள்ளது. பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. பிகாா் தோ்தலும் காங்கிரஸுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆவடி அருகே நாட்டு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த விவகாரம்: மேலும் இருவர் கைது!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.87.93ஆக நிறைவு!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

திரையரங்கில் ரசிகர்களுடன் ‘டியூட்' சரத் குமார்!

4வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றம்: சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT