கோப்புப் படம் 
இந்தியா

புணேவில் மேலும் 5 பேருக்கு ஜிபிஎஸ் நோய் பாதிப்பு! பலி எண்ணிக்கை - 7

ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உள்ளது.

DIN

புணேவில் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உள்ளது.

பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் பாதிப்பு பல காலமாக சமூகத்தில் இருந்தாலும், அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் புணேவிலும், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும் அந்தப் பாதிப்பு தீவிரமாக பரவிவருகிறது.

புணேவில் மாவட்டம் முழுவதும் பரவலாக ஜிபிஎஸ் பரவியுள்ள நிலையில், மேலும் 5 பேருக்கு ஜிபிஎஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் 37 வயதுடைய நபர் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். புணேவைப் போன்று அண்டை நகரமான பிம்ரி சின்சிவாட் பகுதியில் 29 பேருக்கு ஜிபிஎஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அங்கு உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.

இதையும் படிக்க | ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT