ஆர்டிஐ 
இந்தியா

ஆர்டிஐ-ன் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வரக் கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணை!

அரசியல் கட்சிகளை ஆர்டிஐ-ன் கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு குறித்து...

DIN

அரசியல் கட்சிகளை ஆர்டிஐ-ன் கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி, தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணையை வருகிற ஏப்ரல் 21 அன்று முதல் விசாரிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று (பிப். 14) தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்களின் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ஏப்ரல் 21 அன்று தொடங்கும் வாரத்தில் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

தேசிய, மாநில அரசியல் கட்சிகளை ஆர்டிஐ சட்டத்தின்படி பொது அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்றம் அறிவிக்கக் கோரி மனுதாரர்களான ஜனநாயக சீர்திருத்த சங்கம், வழக்குரைஞர் அஸ்வினி குமார் மற்றும் பலரும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் காங்கிரஸ், பாஜக மற்றும் பல கட்சிகள் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மத்திய அரசு மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கொண்டுவர கோரிக்கை வைத்து ரிட் மனு பெற முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது.

அரசியலமைப்பு முழுவதும் அரசியல் கட்சிகளைச் சுற்றியே உள்ளது என்பதை உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் உபாத்யாய் சுட்டிக்காட்டினார்.

"அரசியல் கட்சிகள் தொடர்ந்து பொதுக் கடமைகளைச் செய்வதில் ஈடுபட்டுள்ளன. பொது நலனுக்காக அரசியல் கட்சிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் அவசியம். எனவே, ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 2(ஹெச்)-ன் படி பொது அதிகாரத்தின் கீழ் அவற்றைக் கொண்டுவரவேண்டும்” என்று மனுவில் உபாத்யாய் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29ஏ-ன் கீழ் ஒரு சங்கம் அல்லது தனிநபர் அமைப்பு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் ஒரு அரசியல் கட்சியின் அந்தஸ்தைப் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இல.கணேசன் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

சீனாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT