பெங்களூரில் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசினார்.
பெங்களூரில் தனியார் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட சர்வதேச மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெண்கள் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார். மாநாட்டில் குடியரசுத் தலைவர் பேசியதாவது, ``மன வலிமை என்ற ஒன்று இல்லாமல், எதனையும் சாதிக்க முடியாது. அனைத்து பெண்களும் தைரியத்தோடு பெரிய கனவுகளை காண வேண்டும், அந்த கனவுகளை அடைய அனைத்து வகையிலான வலிமையையும் வெளிக்கொணர வேண்டும்.
உங்கள் இலக்கை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வளர்ந்த இந்தியா மட்டுமின்றி உலகத்தை நோக்கிய ஒரு படியாகும்.
பெண்கள் அன்பின்வழி வழிநடத்தும் திறனைப் பெற்றிருப்பர். தனிநபர் என்ற நிலையைத் தாண்டி, குடும்பம், சமூகம், உலகளவிலான தலைவர் என்ற அளவுக்கு உழைக்கும் திறன் கொண்டவர்கள்.
சில சமயங்களில் ஒரு சமூகத்தின் கலாசார விதிமுறைகள், பெண்களின் உணர்ச்சி நலனைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதை கடினமாக்குகின்றன.
இன்றைய உலகில் அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று, மன ஆரோக்கியம். எந்தவொரு பெண்ணும் வாழ்க்கையை வாழவும், குடும்பம், சமூகம் மற்றும் உலகுக்கு பங்களிக்கவும் மன ஆரோக்கியம் முதன்மையானது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: அறிவாலயத்தின் துகளைக்கூட அசைக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.