முகப்பு
இந்தியா

வாட்ஸ்ஆப்பில் இன்ஸ்டாகிராம்! புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் கணக்கை இணைக்கும் ஒரு புதிய வசதி விரைவில் அறிமுகமாகிறது.

Updated On : 14 பிப்ரவரி 2025, 2:26 pm IST
பகிர்:

வாட்ஸ்ஆப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் கணக்கை இணைக்கும் ஒரு புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வாட்ஸ்ஆப்பில் மேலும் ஒரு புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

ஒரு சமூக வலைத்தளக்கணக்கில் மற்ற சமூக வலைத்தளங்களின் கணக்கின் விவரங்களை இணைக்கலாம். உதாரணமாக பேஸ்புக்கில் மற்ற சமூக வலைத்தளங்களின் விவரங்களை சேர்க்க முடியும். இதனால் ஒருவரின் பேஸ்புக் விவரங்களைப் பார்ப்பவர்கள், அவரின் எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட கணக்குகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வாட்ஸ்ஆப்பில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமின் ஐடி-யை இணைக்கும் வகையில் புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

தற்போது வாட்ஸ்ஆப்பில் ஒருவரின் பெயர், மொபைல் எண் விவரங்கள் மட்டுமே உள்ளன.

வாட்ஸ்ஆப்பில் இன்ஸ்டாகிராமின் கணக்கை இணைக்கும் இந்த வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐஓஎஸ் பயனர்களுக்கும் பெற்று வருகின்றனர். விரைவில் மற்ற பயனர்களுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த புதிய அம்சத்தால் ஒருவரின் வாட்ஸ்ஆப் நம்பர் இருந்தாலே அவரின் இன்ஸ்டா கணக்கைத் தெரிந்துகொள்ள முடியும்.

விரைவில் மற்ற சமூக வலைத்தளங்களின் கணக்குகளும் வாட்ஸ்ஆப்பில் இணைக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றையும் மெட்டா நிறுவனம் நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.