மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் துறைகளில் சிறப்பான எதிர்காலம் உருவாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மெஸ்ராவில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் பிளாட்டினம் ஜூப்லி கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார். அவரின் உரையில்,
உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஏஐ தொடர்புடைய படிப்புகளில் ராஞ்சி பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் முன்னணியில் இருப்பது பெருமைக்குரியது.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகிய துறைகளில் வியத்தகு முன்னேற்றங்கள் உருவாகும் என்றும், உயர்கல்வியில் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
உருவாக்கப்படும் தொழில்நுட்ப வாய்ப்புகள் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட வேண்டும். மேலும் கொண்டுவரப்படும் பெரும் மாற்றம் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்றார்.
இருப்பினும், பாரம்பரிய சமூகங்களின் அறிவுத் தளத்தைப் புறக்கணிக்க வேண்டாம் என்று புதுமைப்பித்தர்கள் மற்றும் தொழில்முனைவோரை எச்சரித்த அவர், "பெரும்பாலும், பிரச்னைகளுக்கு பெரிய தொழில்நுட்ப தலையீடுகள் தேவையில்லை.
அறிவியல், தொழில்நுட்பம், புதுமை மற்றும் தொழில்முனைவோர் கண்காட்சியைக் குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார். இதில் ஏஐயால் இயக்கப்பட்ட ரோபோக்கள் மற்றும் சுயமாக இயக்கப்படும் கார்கள் அடங்கும்
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நேற்று ஜார்க்கண்டிற்கு வருகை தந்துள்ளார். அவரது வருகையை முன்னிட்டு ஜார்க்கண்ட் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.