இந்தியா

காணாமல்போன 3 லட்சம் குழந்தைகளில் 36,000 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை!

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் காணாமல்போன குழந்தைகள் குறித்த அறிக்கையை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பித்தார்.

DIN

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் காணாமல்போன குழந்தைகள் குறித்த அறிக்கையை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பித்தார்.

இந்தியா முழுவதும் குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜரானார். அவர் தெரிவித்ததாவது, ``2020 ஆம் ஆண்டுமுதல் கடந்த 4 ஆண்டுகளில் காணாமல்போன கிட்டத்தட்ட 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலானோரை மாநில மற்றும் மத்திய காவல்துறை மீட்டிருந்தாலும், கிட்டத்தட்ட 36,000 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

குழந்தைகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு, நான்கு மாதங்களாகியும் கண்டுபிடிக்கப்படாவிட்டால், காணாமல்போன குழந்தைகள் வழக்குகளை மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் காணாமல்போன குழந்தைகளில் அதிகபட்சமாக 58,665 பேர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். பிகாரில் 2020 முதல் 24,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 12,600-க்கும் மேற்பட்டோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், 4 மாதங்களுக்குள் 45,585 பேரை மீட்கப்பட்டுள்ளனர்.

தில்லி, பஞ்சாப், நாகலாந்து, ஜார்க்கண்ட், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணாமல்போன குழந்தைகள் மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை அம்மாநில அரசுகள் வழங்கவில்லை’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடு மேய்ப்பதில் தகராறு: 3 போ் மீது வழக்கு

ஆரணி: விநாயகா் சிலை கரைக்கும் குளம் ஆய்வு

பொதுமக்களை அவதூறாக பேசியவா் கைது

மாயக்காரி... சமீனா அன்வர்!

காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

SCROLL FOR NEXT