ரமலான் மாதம்: ஆந்திரத்திலும் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு!
ஆந்திரத்திலும் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு தொடர்பாக...
ரமலான் மாதத்தையொட்டி, அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அலுவலக நேரத்தை குறைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
ரமலான் பண்டிகை இந்தாண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக, மார்ச் 2 முதல் 30 வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து மாலையில் தொழுகை செய்வார்கள்.
இந்த நிலையில், ஆசிரியர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கிராம / வார்டு செயலாளர்கள் பணிபுரியும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் வரும் மார்ச் 2 முதல் மார்ச் 30 வரையிலான ரமலான் காலத்தில் அவர்கள் கடைப்பிடிக்கும் சடங்குகள் தொடர்பான வழிகாட்டுதலின் படி, தங்களது அலுவலக நேரம் முடிவுதற்கு 1 மணி நேரம் முன்னரே செல்லலாம் என்று ஆந்திர மாநில தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?
ரமலான் மாதத்தில் நோன்பு முடித்து தொழுகை செய்வதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அலுவலக நேரத்தை குறைத்து மாலை 4 மணிக்கு வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கி தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.