அயோத்தி கோயில் (கோப்புப்படம்) ANI
இந்தியா

அயோத்தியில் ஒரு கி.மீ. பயணிக்க ரூ. 300 வசூல்! 30 பைக்குகள் பறிமுதல்!

அயோத்தியில் பக்தர்கள் பயணிக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 300 வசூலிக்கப்பட்டது பற்றி...

DIN

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க ரூ. 300 வரை வசூலித்த இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கும் செல்லும் பக்தர்கள் புனித நீராடிவிட்டு, அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதால் கூட்டம் அலைமோதுகின்றன.

நாள்தோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அயோத்தி கோயிலுக்கு வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கி.மீ. ரூ. 300 கட்டணம்

அயோத்தி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்திக் கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்களை இருசக்கர வாகனங்கள் மூலம் சிலர் அழைத்துச் செல்கின்றனர். ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்ய ரூ. 100 முதல் 300 வரை கூட்டத்தை பொறுத்து வசூலிப்பதாக பக்தர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அயோத்தி காவல்துறையினர் நடத்திய சோதனையில் 30 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

விஐபி தரிசன மோசடி

அயோத்தி ராமர் கோயிலில் விஐபி சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாக பணத்தைப் பெற்று ஒருவர் ஏமாற்றியதாக அயோத்தி காவல் நிலையத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மும்பையில் இருந்து அயோத்திக்கு அழைத்து வந்து கோயிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்காக ரூ. 1.8 லட்சம் கட்டணம் வசூலித்து ஏமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்படாத சுற்றுலா வழிகாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தின் பாதுகாவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

பிளாக் நூடுல்ஸ்... ரித்திகா சிங்!

தேர்தல் ஆணையம் சொன்னது பொய்; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறேன் - அகிலேஷ் யாதவ்

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

SCROLL FOR NEXT