ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பிப். 20) சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு மாணவர்களுடன் இன்று பேசியதாவது, “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தலித்துகள் கொடுமைகளை எதிர்கொண்டு வந்தனர். அம்பேத்கர் அரசமைப்பை உருவாக்கும்போது இந்த பாகுபாடுகளையும் கொடுமைகளையும் மனதிற்கொண்டு வடிவமைத்துள்ளார். அரசமைப்பின் மூலம் தலித்துகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார் அம்பேத்கர்” என்று பேசியுள்ளார் ராகுல் காந்தி.
மேலும், அவர் பேசியதாவது, “இந்தியாவில் இன்று அரசமைப்பின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் மக்கள்தொகையில் 15 சதவிகிதம் தலித் சமூகப் பிரிவினரே. ஆனால், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்களும் தலைமைப் பதவிகளை அலங்கரிப்பவர்களும் இந்த விகிதத்தில் இல்லை(தலித் மக்கள் இந்த பதவிகளில் மிகக் குறைவாகவே உள்ளனர்).
அரசமைப்பை கசக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசமைப்பை பாதுகாப்பது நமது கடமையாகும். தலித்துகள் கல்வியறிவு பெற வேண்டும்; அவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். அப்போதுதான், அவர்களுக்கான சலுகைகளைப் பெற முடியும்” என்றார்.
இதையும் படிக்க : நாட்டில் தலித்துகள் இல்லையென்றால்..! ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.