இந்தியா

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

DIN

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் ஒரு ஜீப்பில் கும்பமேளா நடைபெறும் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்றுவிட்டு காசிக்கு திரும்பும்போது வாரணாசியில் மிர்ஸா முராரா பகுதிக்கு அருகே ஜீப் வரும்போது, நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கழுத்தை அறுத்து எஸ்.ஐ. தற்கொலை முயற்சி!

மூதாட்டியிடம் நகை பறிப்பு!

தங்க நாணயம் கொள்ளையடித்த வழக்கு: ராஜஸ்தானைச் சோ்ந்த 3 போ் கைது!

இந்திய தனியாா் விண்வெளித் துறையில் இளைஞா் புரட்சி! தனியாா் விண்வெளி வளாகத் திறப்பு விழாவில் பிரதமா் மோடி!

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு நிவாரணம்

SCROLL FOR NEXT