சோனியா காந்தி (கோப்புப்படம்) 
இந்தியா

சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

சோனியா காந்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது பற்றி...

DIN

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பினார்.

சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சர் கங்கா ராம் மருத்துவமனையில் வியாழக்கிழமை(பிப். 20) காலை அனுமதிக்கப்பட்டார்.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையின் காரணமாக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோனியா காந்தி, வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புத்தாடையும் புத்தொளியும்... ஷபானா!

தீப ஒளியாய்... பிரணிகா!

14 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெய்த கனமழை!

ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி யு-20 உலகக் கோப்பையை வென்றது மொராக்கோ!

செல்போன் செயலிகள் மூலம் கடன் கொடுத்து ஏமாற்றும் கும்பல்!

SCROLL FOR NEXT