பிஎஸ்என்எல் நிறுவனமானது, ரூ.397க்கு, 150 நாள்களைக் கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
முதல் 30 நாள்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் அளவில்லா அழைப்பு மற்றும் நாள்தோறும் 2ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சேவை கிடைக்கும். ஆனால், 150 நாள்கள் வரை இன்கமிங் சேவை தொடரும்.
இதனால், பிஎஸ்என்எல் வாடிக்கையார்கள் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு, ஒரே ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்துக்கும்.. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வெறும் 28 நாள்களுக்கு அளவில்லா அழைப்பு மற்றும் டேட்டாவுக்கு கிட்டத்தட்ட ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கும் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டம் உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஜாக்பாட் திட்டம்தான்.
பிஎஸ்என்எல் எண்ணை, இரண்டாவது மாற்று எண்ணாகப் பயன்படுத்தி வருபவர்களுக்கும், எண் செயல்பாட்டில் இருக்க வேண்டுமே என்பதற்காகவே மாதம் ரூ.200 முதல் ரூ.300 செலுத்தி ரீசார்ஜ் செய்தவர்களுக்கும் இது சிறப்பான திட்டமாக அமைந்துள்ளது.
ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு பக்கம் கட்டணங்களை முன்னும் பின்னும் முரணாக வாடிக்கையாளர்களுக்கு அடித்தால் வலிக்காத மாதிரி உயர்த்திக்கொண்டே போகும் நிலையில், அவர்களுக்கு சபாஷ் சரியான போட்டி எனும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல அதிரடிச் சலுகைகளையும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
இதனால், மாதந்தோறும், கணிசமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-க்கு மாறி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.400க்கு ஐந்து மாதங்களுக்கான திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம், இரண்டாவது செல்போன் எண்ணாக பிஎஸ்என்எல்-ஐ வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதாமாதம் ரீசார்ஜ் செய்வதிலிருந்து தப்பிக்கலாம்.
இந்த ரூ.397 திட்டத்தின்மூலம், பிஎஸ்என்எல் சிம்கார்டு வைத்திருப்பவர்கள் ஒரே முறை ரூ.397க்கு ரீசார்ஜ் செய்துவிட்டால், 30 நாள்களுக்கு அளவில்லா அழைப்பு மற்றும் நாள்தோறும் 2ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சேவை கிடைத்துவிடும். அதன்பிறகும் அவுட் கோயில் மட்டுமே நின்றுவிடும். இன்கமிங் தொடரும். இதனால், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.