சாம்பியன்ஸ் டிராபி போட்டியைக் காண திடலுக்கு வருகைபுரிந்த ரசிகர்கள் PTI
இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி காண வரும் வெளிநாட்டு விருந்தினர்களைக் கடத்த சதி!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிகள் நடைபெறும் திடல், அதனைச் சுற்றியுள்ள விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு.

DIN

சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் காண வரும் வெளிநாட்டு விருந்தினர்களைக் கடத்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிகள் நடைபெறும் திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விடுதிகளில் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு அதிகரித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இது தனது நிர்வாகத் திறமையை உலக அரங்கில் நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக பாகிஸ்தான் கருதுகிறது. இதனால் போட்டிகளுக்குத் தேவையான ஏற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் பாகிஸ்தான் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இருந்தபோதிலும் பாகிஸ்தானுக்கு பதிலாக, துபையில் உள்ள திடலில், இந்திய கிரிக்கெட் அணி இந்தத் தொடருக்கான போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியும் துபை சர்வதேச கிரிக்கெட் திடலிலேயே நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் அதிரடியால் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் காண வரும் வெளிநாட்டு விருந்தினர்களைக் கடத்துவதற்கான சதித்திட்டத்தில் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடவுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இதனால், போட்டி நடைபெறும் திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பின்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று பகுதிகளில் இத்தொடருக்கான போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ராணுவ விமானத்துக்கான செலவு அதிகம்! இருந்தும் அமெரிக்கா அதில் மக்களை நாடுகடத்துவது ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT