கோப்புப்படம் 
இந்தியா

என்ஜினில் இருந்து கழன்று ஓடிய ரயில் பெட்டிகள்: பயணிகள் தப்பினா்

மத்திய பிரதேசத்தின் ரத்லமில் 1000-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பயணிகள் ரயிலின் என்ஜின் கழன்று தனியாக சிறிது தொலைவு சென்றது.

Din

ரத்லம்: மத்திய பிரதேசத்தின் ரத்லமில் 1000-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பயணிகள் ரயிலின் என்ஜின் கழன்று தனியாக சிறிது தொலைவு சென்றது.

பின்னா் மீண்டும் ரயிலுடன் பெட்டிகள் இணைக்கப்பட்டுவிட்டதால் பயணிகள் காயமின்றி தப்பினா்.

டீசல் எலக்ட்ரிக் ரயில் என்ஜினான டெமு, இணைக்கப்பட்ட பயணிகள் ரயில் ரத்லமில் இருந்து ஜவோராவை நோக்கி சென்று கொண்டிருந்தது. படாயாலா சௌராசி நிலையம் அருகே இந்த என்ஜின் செயலிழந்தது.

இதனால் ரயில் பெட்டிகளை இணைக்கும் இணைப்பு உடைந்ததால் என்ஜின் பெட்டிகளிடமிருந்து துண்டித்து, சிறு தொலைவுக்குத் தனியே பயணித்தாக ரத்லம் ரயில்வே கோட்ட செய்தித் தொடா்பாளா் கெம்ராஜ் மீனா தெரிவித்தாா்.

மற்றொரு என்ஜின் இணைக்கப்பட்டு 30 நிமிஷங்களுக்குப் பிறகு, ராஜஸ்தானில் உள்ள சித்தோா்கரை நோக்கி ரயில் மீண்டும் புறப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 போ் கொண்ட குழுவை அமைத்து கோட்ட ரயில்வே மேலாளா் அஸ்வினி குமாா் உத்தரவிட்டுள்ளாா். அடுத்த 15 நாள்களில் இக்குழு அறிக்கை சமா்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

அதிக ரிஸ்க், அதிக பலன்... காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்!

வெள்ளத்தில் மிதக்கும் பெய்ஜிங்: 44 பேர் பலி, 9 பேர் மாயம்!

கல்லறையிலும் க்யூஆர் கோடு! நினைவலைகளைப் புதுப்பிக்க புதிய முயற்சி!!

ஓவல் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! ஜஸ்பிரீத் பும்ரா, கம்போஜ் நீக்கம்!

SCROLL FOR NEXT