பாஜகவின் முன்னாள் தலைவர் நுபுர் சர்மா  impress
இந்தியா

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நுபுர் சர்மா!

பாஜகவின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா மகா கும்பமேளாவில் புனித நீராடினார்..

DIN

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பாஜகவின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா புனித நீராடினார்.

இஸ்லாமியர்களின் ஆன்மிக குருவான நபிகள் நாயகம் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நுபுர் சர்மா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் பரவலாக கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியாவின் பல பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து, கடந்த 2022-இல் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நுபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பாஜகவின் முன்னாள் நிர்வாகியான நுபர் சர்மா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி மகா சிவராத்திரியான நாளை நிறைவடைகிறது. திரிவேணி சங்கமத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகை, நடிகர்கள் வரை அனைவரும் புனித நீராடினர்.

45 நாள்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து இதுவரை 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடிச் சென்றதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

50 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ரயில்வே துறைக்கு புத்துயிர்: அஸ்வினி வைஷ்ணவ்

ஜம்மு-காஷ்மீர்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல்

SCROLL FOR NEXT