முகப்பு
இந்தியா

சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறவிகள்: குடியரசுத் தலைவர்

துறவிகள் சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு..

Updated On : 26 பிப்ரவரி, 2025 at 10:22 AM
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
பகிர்:

இந்தியாவில் உள்ள துறவிகள் சமூக தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், சமூகத்தில் பெண்களுக்கு மரியாதைக்குரிய இடத்தை உறுதி செய்துள்ளதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கர்ஹா கிராமத்தில் உள்ள பாகேஷ்வர் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். கோயிலில் 251 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது.

விழாவில் அவர் பேசியது,

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையத் துறவி சமூகத்தின் பங்கு முக்கியமானது. சமூகத் தீமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவதன் மூலம் சமூகத்திலிருந்து தீமைகளை அகற்றுவதிலும் துறவிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். மேலும் சமூகத்தில் பெண்களுக்கு மரியாதைக்குரிய இடத்தையும் உறுதி செய்துள்ளது.

துக்காராம், ரவிதாஸ், கபீர்தாஸ், குருநானக், மீரா பாய் போன்ற பிரபல துறவிகளின் பங்களிப்பைப் பற்றி அவர் நினைவு கூர்ந்தார்.

கூட்டுத் திருமண விழாவை ஏற்பாடு செய்ததற்காக பாகோஷ்வர் கோயில் அமைப்பைப் பாராட்டினார் முர்மு. திருமணப் பெண்கள் சுயச்சார்புடையவர்களாக மாற்றத் தையல் இயந்திரம் பிற தேவையான பொருள்கள் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த விழாவில் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், முதல்வர் மோகன் யாதவ் மற்றும் பாகேஷ்வர் பீடத்தின் மடாதிபதி திரேந்திர சாஸ்திரி ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

முழு கட்டுரையைப் படிக்க →