ஜாமா மசூதி  கோப்புப் படம்
இந்தியா

சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!

உ.பி. சம்பலில் உள்ள ஜாமா மசூதியை சுத்தம் செய்ய உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றம்.

DIN

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பரில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 4 பேர் பலியாகி பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு மசூதியை சுத்தம் செய்யவும் வெள்ளையடிக்கவும் மசூதி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

எனவே, இது தொடர்பாக மசூதியில் ஆய்வு நடத்தி இன்று அறிக்கை சமர்பிக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், மசூதியின் உள்ளே செராமிக் பூச்சுகள் உள்ளதால் தற்போது வெள்ளையடிக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மசூதி சார்பில் சுத்தம் செய்யவும் விளக்குகளை சரி செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்த நீதிமன்றம் மசூதியை முழுவது சுத்தம் செய்து அங்குள்ள புற்களை அகற்றுமாறு இந்திய தொல்லியல் துறையினருக்கு உத்தரவிட்டது.

சுத்தம் செய்யும் பணியின்போது எந்த இடையூறும் ஏற்படாது என்று மசூதி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT