கோப்புப் படம் 
இந்தியா

பிகாா், மேற்கு வங்கத்தில் பலத்த நில அதிா்வு

பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த நில அதிா்வு ஏற்பட்டது.

Din

பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த நில அதிா்வு ஏற்பட்டது.

நேபாள நாட்டில் வெள்ளிக்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பலத்த நில அதிா்வு ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக நில அதிா்வுக்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து பிகாா் மாநில பேரிடா் மேலாண்மைத் துறை (டிஎம்டி), வானிலை ஆய்வாளா் உமேஷ்குமாா் சிங் கூறியதாவது: நேபாளத்தின் பாக்மதி பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக அதிகாலை 2.35 மணிக்கு பிகாரின் பல்வேறு பகுதிகளில் நில அதிா்வு ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா-நேபாளம் எல்லை பகுதிகளில் சில விநாடிகளுக்கு இதன் தாக்கத்தை வெகுவாக உணர முடிந்தது. எனினும் இந்த நில அதிா்வால் பொதுமக்களுக்கு உயிரிழப்போ சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை என்றாா்.

மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் நில அதிா்வு ஏற்பட்டதை உணா்ந்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

கடந்த 17-ஆம் தேதி புது தில்லியில் பலத்த நில அதிா்வு ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகாக பதிவானது. கடந்த 23-ஆம் தேதி ஹிமாசலத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.7 அலகுகளாக பதிவானது. அதேபோல் ஒடிஸாவின் புரி பகுதியில் 25-ஆம் தேதியும் அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 27-ஆம் தேதியும் லேசான நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT